தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பயனற்ற கட்டுமானங்கள் அகற்றும் பணி மும்முரம்

பயனற்ற கட்டுமானங்கள் அகற்றும் பணி மும்முரம்

பயனற்ற கட்டுமானங்கள் அகற்றும் பணி மும்முரம்


UPDATED : அக் 29, 2026 10:38 PM

ADDED : அக் 29, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:38 PM ADDED : அக் 29, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தில் சிதிலமடைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த அரசு கட்டுமானங்கள் அகற்றும் பணி மும்முரமாக நடக்கிறது.

சமீபத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் புலியூர்நத்தத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த பலவீனமாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து பலவீனமான, சிதிலமடைந்த, பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டுமானங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

வடமதுரை ஒன்றியத்தில் பயன்பாடின்றி கிடந்த அங்கன்வாடி மைய கட்டடங்கள், குடிநீர் தொட்டிகள், பயணியர் நிழற்கூடங்கள் கடந்த சில நாட்களாக அகற்றப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை ஊராட்சி இணை இயக்குனர்கள் சீனிவாசபெருமாள், சீத்தாராமன், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, சரவணன் ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us