/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்
ADDED : ஜன 14, 2025 10:58 PM

கைப்பிடிச்சுவர் இல்லா பாலம்
வத்தலக்குண்டு அருகே உசிலம்பட்டி ரோட்டில் பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் உடைந்து விட்டன. இதனால் வாகனங்கள் தவறி ஆற்றுக்குள் கவிழும் அபாயம் உள்ளது. இதை புதுப்பிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜான், சின்னுப்பட்டி.
.............---------சேதமான ரோடு
ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -காளிசாமி ஒட்டன்சத்திரம்.
........-------------------ஊற்று போல் கசிவு நீர்
வடமதுரை வெள்ளமடை பகுதியில் குடிநீர் பைப் லைன் உடைந்து கசிவு நீர் ஊற்று போல் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் கடந்து செல்வதற்கு சிரமமப்படுகின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். --முருகன், வடமதுரை...............
குப்பையால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல் பூ மார்க்கெட் நுழைவு பகுதியில் குப்பை மலை போல் குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதால் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி, திண்டுக்கல்.
................----------சேதமான மின் காம்பம்
நத்தம் அருகே சிறுகுடி எம்.ஜி.ஆர்., நகரில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மின்கம்பத்தில் மேல் பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மின் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. கம்பத்தை மாற்றவேண்டும். வீரா, நத்தம்.
..............----------மழைநீருடன் கழிவு நீர்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறுகிறது. அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் கழிநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். செந்தில், திண்டுக்கல்.
...........-----------
அச்சத்தில் அலுவலர்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் நாய்களால் அலுவலர்கள் ,பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் கடிக்கபாய்வதால் பலரும் அலறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். சந்திரசேகர், திண்டுக்கல்.
.....................--------------