/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்
ADDED : ஜூன் 18, 2025 04:30 AM

குப்பையை அகற்றுங்க
திண்டுக்கல் - திருச்சி ரோடு இ.பி. காலனி அருகே குப்பை அள்ளப்படாமல் சிதறி கிடக்கிறது இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையில் கால்நடை மேய்கிறது .பாதிப்பு ஏற்படும் முன் குப்பையை அகற்ற வேண்டும்.பாண்டியன், திண்டுக்கல்.
...........-----------சாலையை சீரமையுங்க
ஆவிலிபட்டி ரோட்டில் இருந்து பெருமாயூர் செல்லும்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். லட்சுமணன், ஆவிலிபட்டி.
.........------------
ரோட்டில் ஓடும் கழிவு நீர்
திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் இருந்து ஸ்பென்சர் காம்பவுண்ட் ரோட்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக ஓடுகிறது .இதனால் அப்பகுதி முழுவதும் நோய் தொற்று ஏற்படுகிறது.இதை சரி செய்ய வேண்டும்.உமாதேவி, திண்டுக்கல்.
............------------பள்ளத்தால் விபத்து
திண்டுக்கல் தாலுகா ஆபிஸ் ரோட்டில் கேட்வாழ்வு மூடி சேதத்தால் வெளியாகும் நீரால் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது .பாதசாரிகள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது . இதை சரிசெய்ய வேண்டும். லோகநாதன், திண்டுக்கல்.
.............-------------மரக்கிளையால் விபரீதம்
திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் மரக்கிளை இடையே மின் ஒயர்கள் செல்வதால் மழை, காற்று நேரங்களில் விபத்து ஏற்படுகிறது .இதன் அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்.
........-------------குடிநீர் குழாயில் உடைப்பு
பழநி காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடும்பன் மலை செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது .இதை சரி செய்ய பள்ளம் தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. சீரமைக்க வேண்டும். விஜயகுமார் பழநி.
..........-------------மரத்தில் அடிக்கப்படும் ஆணி
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர். மரத்தில் ஆங்காங்கே ஆணிகளால் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது .ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும். அமுதா, திண்டுக்கல்.
.......-----------