/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருதாநதி அணையில் தண்ணீர் திறப்பு
/
மருதாநதி அணையில் தண்ணீர் திறப்பு
ADDED : செப் 21, 2024 06:07 AM

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி திறந்துவைத்தார். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பெரியசாமி பேசியதாவது:- மருதாநதி அணையிலிருந்து 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு விநாடிக்கு 20 கன அடியும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக,புதிய ஆயக்கட்டிற்கு விநாடிக்கு 70 கன அடியும் மொத்தம் நாளொன்றிற்கு விநாடிக்கு 90 கன அடிக்கு மிகாமல் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் தாலுகா அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டியில் 5943 ஏக்கர், நிலக்கோட்டை தாலுகா சேவுகம்பட்டி. கோம்பைபட்டியில் 640 ஏக்கர் என 6583 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மருதாநதி அணை கீழ் பகுதியான வடக்கு வாய்க்கால், தெற்குவாய்க்கால் சீரமைப்பு தொடர்பாக வேறு ஒரு திட்டம் மூலம் ஆக்கப்பூர்வமான செயல் வடிவம் உருவாக்கப்படும். இதுதொடர்பாக விவசாயிகளுடன் கலந்தாலோசித்து விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், ஆர்.டி.ஓ., சக்திவேல், அய்யம்பாளையம் பேரூராட்சி தலைவர் ரேகா ஐயப்பன், மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் கண்ணன் பங்கேற்றனர்.