ADDED : மே 08, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் திண்டுக்கல்-மதுரை ரோட்டில் பிள்ளையார்நத்தம் அருகே அண்ணாமலையார் நகர் பஸ் ஸ்டாப்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் அருண்பாண்டியன் வரவேற்றார். தர்பூசணி, பழச்சாறு, பழங்கள் வினியோகிக்கப்பட்டன.
சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா, துணை தலைவர் ஆனந்தி, பொறுப்பு குழு நிர்வாகி நாககண்ணன் பங்கேற்றனர்.

