/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில் சுரங்கப்பாதையில் கொட்டும் தண்ணீர்
/
ரயில் சுரங்கப்பாதையில் கொட்டும் தண்ணீர்
ADDED : மார் 20, 2024 12:31 AM

மின் பெட்டியால் விபத்து
கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா வாகன நிறுத்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு மின் பெட்டி திறந்த வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. இதன் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி. கார்த்திக், கொடைக்கானல்.
....................-------மின்கம்பத்தில் செடிகள்
திண்டுக்கல் அருகே எம்.எம். கோவிலுார் ரோட்டில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க மின் துறையினர் முன் வர வேண்டும். கருப்புச்சாமி, எம். எம். கோவிலுார்.
.......-------
குப்பையை அகற்றுங்க
திண்டுக்கல் பதிவுத்துறை அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டி நிறைந்து அள்ளப்படாமல் உள்ள குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தினந்தோறும் அலுவலர்கள் மக்கள் வந்து செல்லும் வழியில் என்பதால் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ராணி, திண்டுக்கல்.
.................--------சுரங்கப்பாதையில் தண்ணீர்
திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெரு குழாயில் வருவது போன்று தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது .மேலும் உள்ளே ஆபத்தான இரண்டு பெரிய பள்ளங்களும் உள்ளது .இதை சரி செய்ய வேண்டும். பாலசந்தர், திண்டுக்கல்.
.............---------சாக்கடையில் பிளாஸ்டிக் குப்பை
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பெரிய பள்ளபட்டி செல்லும் ரோடு சாக்கடையில் பிளாஸ்டிக் கலந்த குப்பையை கொட்டுவதால் நீர் தேங்கி நிற்கிறது .இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும். ராஜா, திண்டுக்கல்.
......................---------குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
பழநி கிழக்கு பட்டாளி தெரு ரோடு ரேஷன் கடை அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் .உடைந்த குழாய் பகுதியை சரிசெய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஷ்வினி, பழநி.
............----------மின்கம்ப ஒயர்களில் நுாலாடை
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் மின்கம்ப ஒயர்களில் நுாலாடை படர்ந்து அதன் மேல் இலைகள் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. வெயில் காலம் என்பதால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் இதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் செல்வகுமார், திண்டுக்கல்.
..............---------

