/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரி செலுத்தாவிடில் குடிநீர் 'கட்': மாநகராட்சி எச்சரிக்கை
/
வரி செலுத்தாவிடில் குடிநீர் 'கட்': மாநகராட்சி எச்சரிக்கை
வரி செலுத்தாவிடில் குடிநீர் 'கட்': மாநகராட்சி எச்சரிக்கை
வரி செலுத்தாவிடில் குடிநீர் 'கட்': மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜன 31, 2025 12:16 AM

திண்டுக்கல்; ''திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பு 'கட்' செய்யப்படும்'' என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.
அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு கட்டடங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை, தொழில் வரி என ரூ.53 கோடி பாக்கி நிலுவையில் உள்ளது. வரி கட்டாத தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.
பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி கட்ட வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு 'கட்' செய்யப்படும்.
வரி பாக்கி இருப்பவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறோம், ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு தெருக்களிலும் விழிப்புணர்வும் செய்யப்படுகிறது. வரி வசூல் செய்ய பிப்.1 முதல் பிப்.15 வரை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டுள்ளது என்றார்.