sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிநீர் தொட்டி சேதத்தால் வீணாகும் தண்ணீர்

/

குடிநீர் தொட்டி சேதத்தால் வீணாகும் தண்ணீர்

குடிநீர் தொட்டி சேதத்தால் வீணாகும் தண்ணீர்

குடிநீர் தொட்டி சேதத்தால் வீணாகும் தண்ணீர்


ADDED : டிச 06, 2024 06:29 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்து அபாயம் : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ஜி.எஸ். நகரில் பீஸ் கேரியல் கட்டை சேதமடைந்து திறந்த வெளியில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் பராமரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

--ராஜதுரை, திண்டுக்கல்.

தேவை அறிவுரை : எரியோட்டில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பயணிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல போலீசார் போதிய அறிவுரை வழங்க வேண்டும். -பாலமுருகன், எரியோடு.

நடைமேடையில் தேங்காய் மட்டை : பழநி இடும்பன் குளத்தில் இருந்து கிரிவீதி செல்லும் ரோட்டில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைமேடையில் தேங்காய் மட்டைகளை கொட்டி குவித்துள்ளனர் .இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது.

-குமரன், பழநி.

சேதமடைந்த ரோடு : ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் எதிரில் இருந்து சத்யா நகர் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் உட்பட பலரும் பாதிக்கின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-முத்துச்சாமி ஒட்டன்சத்திரம்.

கழிவுநீர் தேக்கம் : திண்டுக்கல் அனுமந்தநகர் 3வது தெருவில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. குப்பையை உடனுக்குடன் அகற்றி சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரியாஸ், அனுமந்த நகர்.

சேதமான குடிநீர் தொட்டி : நிலக்கோட்டை பள்ளபட்டி தெற்கு தெருவில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது தண்ணீர் தொட்டிய புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.அய்யர்பாண்டி, நிலக்கோட்டை.

குப்பையால் சுகாதாரக்கேடு : பழநி இடும்பன் மலை இட்டேரி ரோட்டில் இருந்து கிரிவலம் செல்லும் பாதையில் ஈரோடு தீர்த்தக்காவடி மடம் அருகில் குப்பை அள்ளாததால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது .பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். குப்பையை அகற்ற வேண்டும்.

-பரமசிவம், பழநி.






      Dinamalar
      Follow us