/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் குப்பையால் மாசடையும் அருவிகள்
/
கொடைக்கானலில் குப்பையால் மாசடையும் அருவிகள்
ADDED : ஜன 20, 2025 05:54 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பையால் அருவிகள் மாசடைகின்றன. அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகிறது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளின் அழகு, இயற்கை சுற்றுச்சூழலை பயணிகள் ரசித்து செல்வர். இங்குள்ள டோபிக்கானல், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச் சோலை அருவிகள் குப்பையால் மாசடைகின்றன.
இதற்கு அருவிக்கு செல்லும் நீர்நிலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படாமல் குப்பையை நீர் நிலைகளில் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதே காரணமாகும். நீர் வழித்தடங்களில் மனிதக் கழிவு , செப்டிக் டேங்க் கழிவுகளை கனமழை பெய்யும் பொழுது திறந்து விடும் காட்டேஜ்கள் என சுகாதாரக்கேடாக சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள அருவிகள் அனைத்தும் மாசடைகிறது என இயற்கை ஆர்வலர்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
நகரின் மையத்தில் உள்ள டோபிகானல் அருவி அருகே குடியிருக்கும் பொதுமக்கள் அருவி கரையோரம் நாள்தோறும் குப்பையை குவிப்பதும்,எரிப்பதும் என சுகாதாரகேட்டை உருவாக்குகின்றனர். இந்த அருவிக்கு வரும் தண்ணீர் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர், நகரின் பல்வேறு நீர் ஆதாரங்கள் இருந்து உருவாகும் நன்னீராகும். இவை கொடைக்கானலை கடந்து பழநி நகரின் குடிநீர் ஆதாரங்களில் செல்கின்றன. பெரும்பாலும் கொடைக்கானல் மலைப்பகுதியை சுற்றிய நீராதாரங்கள் அனைத்தும் மலை அடிவாரத்தில் உள்ள அனணகளுக்கு செல்வதாக உள்ளது.
இவை பாசன வசதிக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. அருவிகளின் சுகாதாரத்தை பொதுப்பணித்துறையோ, நகராட்சியோ கண்டுகொள்வதில்லை.
மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் மலை பகுதியில் உருவாகும் நீராதாரங்கள் அதன் மூலம் உருவாகும் அருவிகளின் சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.