/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடைக்கு முன்பே விற்பனைக்கு வந்த தர்பூசணி
/
கோடைக்கு முன்பே விற்பனைக்கு வந்த தர்பூசணி
ADDED : பிப் 06, 2025 12:23 AM

ஒட்டன்சத்திரம்; கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே ஒட்டன்சத்திரத்தில் தர்பூசணி விற்பனை மும்முரம் அடைந்தது.
ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்னும் அதிகாலை நேரத்தில் அதிகளவில் பனி தொடர்கிறது. ஆனால் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் வெம்மையை போக்க திண்டிவனம் பகுதியில் விளைந்த தர்பூசணி குளிர்விக்க வந்தது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் விழுப்புரம் பகுதியில் விளைந்த தர்பூசணி இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது தர்பூசணி சீசன் இன்னும் தொடங்காத நிலையில் ஒட்டன்சத்திரம் -பழநி ரோட்டில் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகே தர்பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
கடை உரிமையாளர் கலியபெருமாள் முருகன் கூறியதாவது: ஒரு கிலோ தர்பூசணி ரூ.20க்கு விற்கப்படுகிறது என்றார்.