/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய கார் ஆயுதங்கள் பறிமுதல்; ஒருவர் சிக்கினார்

ADDED : டிச 25, 2024 07:58 AM

சாணார்பட்டி : திண்டுக்கல் -நத்தம் சாலையில் சென்ற பச்சை நிற குவாலிஸ் காரை மறித்து பிடிக்க சொல்லி எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து நேற்றிரவு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அந்த காரை கொசவபட்டியில் நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் கார் நிற்காமல் அங்கிருந்த பேரிகார்டு மீது மோதிவிட்டு தப்பியது.
உடனடியாக கோபால்பட்டியில் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி அக்காரை நிறுத்த போலீசார் முயற்சித்துள்ளனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் சாலையை கடக்க முயன்ற வேம்பார்பட்டியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சங்கிலிமணி 25, என்பவர் மீது மோதி அவரை 50 மீட்டர் சாலையிலேயே இழுத்துச் சென்று தூக்கி வீசியது. பின்னர் வடுகபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீசார் வரிசையாக சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்த பேரிக்கார்டுகள் மீது மோதியும் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி தப்பியது.
பின் அந்தக் கார் சக்கிலியான்கொடை என்ற கிராமத்திற்குள் சென்று அங்குள்ள கரந்தமலை அடிவாரப் பகுதிகுள் சென்றது.பொதுமக்கள் மற்றும் போலீசார் காரைத் துரத்தி சென்று பார்த்தபோது அதற்குள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
அதில் இருந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பினர். இவர்கள் யார், எதற்காக இச்சம்பவத்தில் ஈடுபட்டனர் என விசாரணை நடக்கிறது.