ADDED : ஜன 20, 2025 05:51 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு திண்டுக்கல் தேனி பைபாஸ் ரோடு எம். வாடிப்பட்டி குறுக்கு ரோடு சந்திப்பில் சரண்யா கிராண்ட் பேலஸ் ஏ.சி. திருமண மண்டப திறப்பு விழா நடந்தது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். சுவிஸ் கார்னியர்ஸ் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தெய்வேந்திரன், மேலாண்மை இயக்குனர் ரத்தினவள்ளி குத்து விளக்கு ஏற்றினர்.
தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், வத்தலக்குண்டு, சேவுகம்பட்டி நகர செயலாளர்கள் சின்னதுரை, தங்கராஜன் முன்னிலை வகித்தனர். திருமண மண்டப உரிமையாளர்கள் செல்வன், செல்வி வரவேற்றனர்.
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கனகதுரை, பொறியாளர்கள் செந்தில்குமார், பாலாஜி, செல்வ விநாயகா மெடிக்கல்ஸ் உரிமையாளர் நாகமுத்து, மாவட்ட பிரதிநிதி ரெக்ஸ், சேவுகம்பட்டி நகர துணை செயலாளர் தனபால், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கார்த்திக் பங்கேற்றனர். டாக்டர்கள் விக்னேஷ் சரண்யா, சர்வேஷ், ஷாஷ்வி நன்றி கூறினர்.