/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு
/
துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு
ADDED : அக் 21, 2024 05:24 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,ஆண்டிஅம்பலம் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு வேடசந்துார் அய்யர்மடத்தில் தி.மு.க.,கிழக்கு,மேற்கு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார்,வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன்,மாநகர செயலாளர் ராஜப்பா,மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி,மாவட்ட துணை செயலாளர்கள் பிலால்,நாகராஜன்,வேடசந்துார் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, சீனிவாசன், சுப்பையன், பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், கணேசன், கருப்பன், கதிரவன், வேடசந்துார் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஜீவா,நிர்வாகிகள் சவுந்தர், ராஜா, மருதபிள்ளை,சாகுல்ஹமீது பங்கேற்றனர்.