ADDED : மார் 13, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : நாடு முழுவதும் உள்ள மத்திய போலீஸ் கேண்டீன் நெட்வொர்க்கில் இருந்து பொருட்களை வாங்கும் போது சிஏபிஎப் பணியாளர்களுக்கு 50 சதவீத ஜி.எஸ்.டி., உதவியை மத்திய அரசு அனுமதித்துள்ளதாக முன்னாள் துணை ராணுவப் பணியாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள இந்த 1,700க்கு மேற்பட்ட கேன்டீன்களின் சங்கம் நடத்தும் 'கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தர்' (கேபிகேபி) அல்லது மத்திய போலீஸ் நலன்புரி அங்காடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த முடிவை திண்டுக்கல் சங்கம் வரவேற்கிறது.

