ADDED : அக் 20, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் தாடிக்கொம்பு,அகரம் பேரூர் கழகங்களின் சார்பில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அழகு மணிகண்டன் தலைமையில் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் செல்வக்குமரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.,இளைஞர் அணி இணைச் செயலாளர் இளையராஜா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பாண்டியராஜன்,கிளை செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய எம்.ஜி,ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் முனிசாமி, கிளை துணைச் செயலாளர் முனுசாமி பங்கேற்றனர்.