/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காவிரி நீரால் குளங்களை நிரப்பும் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று கிராமசபையில் எம்.எல்.ஏ.,விடம் முதியவர் கேள்வி

ADDED : ஆக 16, 2025 02:42 AM
வடமதுரை: 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் வேடசந்துார் தொகுதியின் முக்கிய வாக்குறுதியாக கூறிய காவிரி உபரி நீரால் குளங்களை நிரப்பும் திட்டம் என்னவாயிற்று என வடமதுரை ஒண்டிபொம்மன்பட்டியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜனிடம் முதியவர் கேள்வி எழுப்பினார்.
சுக்காம்பட்டி ஒண்டிபொம்மன்பட்டியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற 70 வயது முன்னாள் ராணுவ வீரரான ராமசாமி, சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் வெற்றி பெற்று தி.மு.க., ஆட்சி அமைந்தால் மாயனுார் தடுப்பணை பகுதியில் இருந்து வாய்க்கால் வெட்டி இங்குள்ள குளங்களில் காவிரி உபரி நீர் நிரப்பப்படும். இது எனது கனவு திட்டம் என பிரசாரம் செய்தீர்களே அத்திட்டம் என்னவாயிற்று என கேட்டார். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., வாக்குறுதி தந்தபடி இதற்கான ஆய்வு நடந்தது. டுத்த கர்நாடகா அரசு அதிகாரிகளுடன் பேசி சம்மதம் பெற வேண்டும். இதற்கான அனைத்து பணிகளும் முடிந்து சென்னை உயரதிகாரிகளிடம் பைல் சென்றுள்ளது. 40 விவசாய சங்க பிரதிநிதிகளை வரவழைத்து அதிகாரிகளை கொண்டே பணிகள் குறித்து விளக்கியுள்ளேன். ஒரு எம்.எல்.ஏ.,வாக இவ்விஷயத்தில் அக்கறையுடன் எனது பணியை செய்து முடித்துள்ளேன் என்றார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் முனியப்பன், நகர செயலாளர்கள் கருப்பன், கணேசன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.