/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இப்படியே போனால் என்னாவது: குளங்கள் மூடப்படுவதால் மழைநீர் சேகரிப்பு பாதிப்பு
/
இப்படியே போனால் என்னாவது: குளங்கள் மூடப்படுவதால் மழைநீர் சேகரிப்பு பாதிப்பு
இப்படியே போனால் என்னாவது: குளங்கள் மூடப்படுவதால் மழைநீர் சேகரிப்பு பாதிப்பு
இப்படியே போனால் என்னாவது: குளங்கள் மூடப்படுவதால் மழைநீர் சேகரிப்பு பாதிப்பு
UPDATED : ஏப் 08, 2025 06:25 AM
ADDED : ஏப் 08, 2025 04:59 AM

இப்படியே போனால் என்னாவது
பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர் கடும் பஞ்சங்களை சந்தித்தனர். பஞ்சத்தில் இருந்து பாதுகாப்பு பெற மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர்.
2003, 2017ல் கூட கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.
இதை தொடர்ந்து வறட்சி பாதிப்பை உணர்ந்து நிலத்தடி நீர் மட்டம் மேம்பட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இதனால் விளை நிலத்தில் இருந்து கிடைக்கும் விவசாய வருமானத்தை காட்டிலும் ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்பது அதிக லாபம் என்றாகிவிட்டது.
இவற்றில் நிலத்தடி பெருக வேண்டி அமைக்கப்பட்டிருந்த தனியார் குளங்களும் தப்பவில்லை.
சென்னையில் 50 ஆண்டுகளில் இதுபோல குளங்கள் மறைந்ததால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வழியின்றி இன்று பெரும் தவிப்பிற்கு ஆளாகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டு.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பல ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி தந்து வந்த சில தனியார் குளங்கள் மண் நிரவி வீட்டு மனைகளாக மாற்றப்படும் அவலம் நடக்கிறது.
குளங்கள் மூடப்படுவதால் கிடைக்கும் மழை நீரை சேகரிக்க வழியின்றி அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிப்படையும்.
அதிக நீர் வரத்து காலங்களில் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகள் தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும் அதை வேறு உபயோகத்திற்காக மாற்றம் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி குளங்களை பாதுகாக்க அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

