/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரமற்ற தயாரிப்பால் சேதமாகும் மின்கம்பங்கள்; பழுது ஏற்பட்டால் சரி செய்ய முடியாது பரிதவிப்பு
/
தரமற்ற தயாரிப்பால் சேதமாகும் மின்கம்பங்கள்; பழுது ஏற்பட்டால் சரி செய்ய முடியாது பரிதவிப்பு
தரமற்ற தயாரிப்பால் சேதமாகும் மின்கம்பங்கள்; பழுது ஏற்பட்டால் சரி செய்ய முடியாது பரிதவிப்பு
தரமற்ற தயாரிப்பால் சேதமாகும் மின்கம்பங்கள்; பழுது ஏற்பட்டால் சரி செய்ய முடியாது பரிதவிப்பு
UPDATED : பிப் 28, 2026 07:03 AM
ADDED : பிப் 28, 2026 06:57 AM

மின்சார பயன்பாடு என்பது தற்போது அனைவருக்குமே அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
அணு, அனல், நீர் மின்நிலையங்கள், காற்றலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சக்தி நீண்ட துாரத்திற்கு உயர மட்ட கோபுர கம்பங்கள் மூலம் மின்பகிர்மான கட்டமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. அங்கிருந்து பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் மக்கள், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்நுகர்விற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள துணை மின்நிலையங்களுக்கு செல்கிறது.
அங்கிருந்து வெவ்வேறு திசைகளில் பீடர்களாக பிரிந்து மக்கள் வசிக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு சென்று மின்கம்பங்கள் மூலம் வீடு, தொழிற்சாலைகளுக்கு சப்ளை வழங்கப்படுகிறது. இந்தவகையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்கள் இன்றும் ஸ்திரமாக நிற்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்களின் தயாரிப்பு தரம் குறைவாக சில ஆண்டுகளிலே சிதைந்து பலவீனமாகி பரிதாபமாக உள்ளன.கம்பியின் இழு திறன், எடையால் கம்பம் ஒடிந்துவிழும் ஆபத்தாக மாறுகிறது. வீடுகளில் மின்சப்ளை துண்டிக்கும் நிலையிலும், தெரு விளக்கு பழுதடைந்தாலும் அதனை சீரமைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
அதிக அழுத்தம் தரப்பட்டால் மட்டுமே அங்கு பணி நடக்கும் சூழல் இருப்பதால் மக்களுக்கும் அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலைக்கு காரணம் என்பது மின்கம்பம் தயாரிப்பில் தரத்தை பராமரிக்க அதிகாரிகள் அக்கறை காட்டாமல் இருப்பதே. இனிமேலாவது தரமான முறையில் மின்கம்பங்களை தயாரித்து நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்கும் வகையில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

