/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் நியமிக்கப்படுவது எப்போது; கையெழுத்துக்காக அலையும் அலுவலர்கள்

ADDED : மார் 22, 2025 06:36 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் கமிஷனர் இல்லாததால் பிறப்பு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சான்றிதழ்களில் கையெழுத்து பெற அலுவலர்கள் மதுரை சென்று வரும் அவலம் உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு பிறப்பு சான்றிதழ் முதல் புதிய கட்டடங்களுக்கு அனுமதி, சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை, வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மக்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கு கமிஷனராக இருந்த ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக இருக்கும் சிவக்குமார் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மதுரை மாநகராட்சி பணியையும் அவர் பார்க்க வேண்டியிருப்பதால் கூடுதல் நேரம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இருந்த போதிலும் திண்டுக்கல் மாநகராட்சியில் வார்டுகளில் நடக்கும் பணிகள், அதற்கான நிதி வழங்குவது, வருவாய் பிரிவு, பொது சுகாதார பணிகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்திற்கும் கமிஷனர் கையெழுத்து தேவைப்படுகிறது.
கமிஷனர் இல்லாததால் அலுவலர்கள் மதுரை சென்று தேவைப்படும் சான்றிதழ்கள், ஆவணங்களில் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பணிகளில் தொய்வும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை மீது நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி திண்டுக்கல் மாநகராட்சிக்கு கமிஷனரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.