ADDED : ஜன 04, 2024 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே பொருளூர் பகுதியில் வெள்ளை கத்தரிக்காய் அறுவடை மும்முரம் அடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பொருளூர் சுற்று கிராமப் பகுதிகளில் கத்தரிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.
பொருளூர் பகுதி தோட்டம் ஒன்றில் விளைந்த வெள்ளை கத்தரிக்காய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இவை 30 லிருந்து 34 வரை எடை கொண்ட சாக்கு பையில் அடைக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் விவசாயம் அழிந்துவிட்டது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கத்தரிக்காய் உட்பட பலவகையான காய்கறிகளை அதிகமாக கொள்முதல் செய்கின்றனர். இதை தொடர்ந்து நேற்று முப்பது கிலோ கொண்ட வெள்ளை கத்தரிக்காய் பை ஒன்று ரூ.1750க்கு விற்பனையானது.