sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமலையில் காபி பயிரை தாக்கும் வெள்ளை தண்டு துளைப்பான் * செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்கும் விவசாயிகள்

/

சிறுமலையில் காபி பயிரை தாக்கும் வெள்ளை தண்டு துளைப்பான் * செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்கும் விவசாயிகள்

சிறுமலையில் காபி பயிரை தாக்கும் வெள்ளை தண்டு துளைப்பான் * செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்கும் விவசாயிகள்

சிறுமலையில் காபி பயிரை தாக்கும் வெள்ளை தண்டு துளைப்பான் * செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்கும் விவசாயிகள்


ADDED : மே 28, 2025 02:16 AM

Google News

ADDED : மே 28, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை காபி பயிர்களை தாக்கும் வெள்ளை தண்டு துளைப்பான் பூச்சிகளால் பாதிப்பு அதிகம் இருப்பதால் விவசாயிகள் செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே உள்ள பன்றிமலை, தாண்டிக்குடி, ஆடலுார், சிறுமலை பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் காபி பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதில் சிறுமலையில் மட்டும் 1200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி பயிர் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு அரபிகா, ரோபஸ்டா என 2 வகையான காபி செடிகள் உள்ள நிலையில் அரபிகா மட்டும் 70 சதவீதம் பயிரிடப்படுகிறது. இவற்றில் வெள்ளை தண்டு துளைப்பான் பூச்சிகள் பாதிப்பு அதிகம் இருப்பதாக விவசாயிகள், காபி தோட்ட பராமரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது : ரோபஸ்டா காபி செடியின் தண்டுகள் மிக கடினமாக இருக்கும். ஆனால் அரபிகா செடியின் தண்டுகள் மிக மெல்லிதாக இருக்கும். இதனால் இந்த வகை செடிகள் வெள்ளை தண்டு துளைப்பான் பூச்சிகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கோடைகாலங்களில் 100 காபி செடிகளில் 30 செடிகள் வரை பூச்சிகள் தாக்குகிறது. ஒரு ஏக்கருக்கு 1000 காபி செடிகள் இருக்கும் நிலையில் 300 செடிகள் வரை பாதிக்கிறது. ஒரு ஆண்டுக்கு என கணக்கிட்டால் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்த செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு செய்யவில்லையெனில் மற்ற செடிகளுக்கும் இந்த பூச்சி தாக்குதல் பரவும் அபாயம் உள்ளது.

சிறுமலை பகுதியில் காபி வாரிய அதிகாரி பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. இதனால் இவர்களுக்கு வழிகாட்ட அதிகாரி இல்லை. ஆண்டுக்கு 100 நாட்களுக்கு மேல் காபி தோட்டத்தில் வேலைகள் இருக்கும். ஆனால் வெள்ளைத் தண்டு துளைப்பான் பூச்சிகள் காரணமாக செடிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வேருடன் அப்புறப்படுத்தப்படுவதால் செடிகள் எண்ணிக்கை குறைகிறது. இதனால் எங்களது வேலை நாட்களும் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர்.

காபி வாரிய அதிகாரிகள் கூறியதாவது : 25 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ, காபி செடிகளுக்கு தேவையான நிழல் கிடைக்கவில்லை என்றாலோ வெள்ளை தண்டு துளைப்பான் பூச்சிகள் அதிக அளவில் தாக்கும். இதனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு வழிமுறைகளை காபி வாரியம் அறிவுறுத்தி வருகிறது.

தமிழகம் முழுதும் 60க்கு மேற்பட்ட பணியாளர்கள் காபி வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டு ஜூனில் பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us