ADDED : நவ 18, 2024 04:38 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பகுதியில் வாழையில் வெள்ளை பூச்சி தாக்குதல் வேகமாக பரவுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
பழைய வத்தலக்குண்டு பகுதியில் வெற்றிலைக்கு மாற்றாக 400 ஏக்கரில் கற்பூரவள்ளி, பூவன், நாட்டு வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார்கள் வெட்டும் பருவத்தில் உள்ளன.
இந்நிலையில் தார்களை அஸ்வினி , வெள்ளைப் பூச்சிகள் தாக்கி உள்ளதால் பச்சையம் முழுவதும் அழிந்து வாழைத்தார் கருகியது போல் காட்சி அளிக்கிறது. இப் பூச்சி தாக்கம் வேகமாக பரவுவதால் பலத்த நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவு செய்துள்ளதால் பலத்த நஷ்டம் ஏற்படும் என கலக்கமடைந்துள்ளனர். நோய் தாக்குதலால் விலையும் அதிகமாக கிடைக்காது என்பதால் வேளாண் துறையினர் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். இதோடு வருவாய்த்துறையினர் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.