/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
யாரை குற்றம் சொல்வதோ: பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்து பயணம்
/
யாரை குற்றம் சொல்வதோ: பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்து பயணம்
யாரை குற்றம் சொல்வதோ: பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்து பயணம்
யாரை குற்றம் சொல்வதோ: பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்து பயணம்
ADDED : பிப் 11, 2024 01:05 AM

மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் காலை,மாலை நேரங்களில் அரசு,தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியப்படி பயணிக்கின்றனர்.
இதை கண்டக்டர்,டிரைவர்கள் கண்டித்தபோதிலும் மாணவர்கள் காதில் வாங்காமல் கால்போன போக்கிலே செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் மாணவர்களுக்கும்,பஸ் ஊழியர்களுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. இதுமட்டுமின்றி கூட்ட நெரிசல் நேரங்களில் சில மாணவர்கள் விபத்துகளில் பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பஸ் படிக்கட்டுகளில் பயணிக்க கூடாது என தினமும் அறிவுரை வழங்க வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,போலீசார் அவ்வப்போது
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்ததான் செய்கின்றனர். இருந்தபோதிலும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் சிலர் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பும் நிலையும் தொடர்கின்றன.
காலை,மாலை நேரங்களில் ஆபத்து பயணங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் தகுந்த விழிப்புணர்வு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

