/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அறிவித்தும் முடங்கிய பழநி -ஈரோடு ரயில் பாதை ஏன் இந்த தாமதம்; நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே துறையினர்

UPDATED : ஆக 07, 2025 08:38 AM
ADDED : ஆக 07, 2025 04:58 AM

பழநியில் இருந்து ஈரோடு வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரயில் பாதை திட்டம் 1922ல் ஆங்கிலேயர் காலத்தில் தயாரானது. அதன் பின் திட்டம் காலதாமதம் ஆனது.
1955 ல் இருந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் திட்டத்திற்கான முதற்கட்ட ஆய்வு 1982 முதல் 1986 வரைநடைபெற்றது.
இப்பாதை சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 480 ஹெக்ேடர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.
இதில் 91 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க நிதி கோரப்பட்டது. 2005- 2006 பட்ஜெட்டில் திட்டம் குறித்து ஆய்வுப் பணிகள் நடைபெற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
2008--09 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான நிதி சிறிய அளவில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது.
ரயில் பாதையின் இறுதி வடிவம் பெறப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. 2011 பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன் பின் 2024 பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழநி- ஈரோடு ரயில் பாதை திட்டம் அமைந்தால் விவசாயம், சுற்றுலா, வியாபாரம், உட்கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சி அடையும். கொடைக்கானல் சுற்றுலா தளம் மேம்படும். சின்னாளப்பட்டி ஈரோடு ஜவுளி தொழில் மேம்படும்.
ஒட்டன்சத்திரம் உடுமலை பகுதியில் இருந்து ஈரோடு சந்தையை இணைக்க ஏதுவாக இருக்கும். இதனால் ஆயிரம் கோடிக்கு மேல் தொழில் வளம் அதிகரிக்கும். பழநி கோயிலுக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக வந்து செல்வர்.
இதனை முறைப்படுத்த ரயில்வே துறையினர் முயற்சிக்க வேண்டும்.