/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த அலட்சியம் : மருத்துவமனைகளில் இல்லை டாக்டர்கள்: சிகிச்சை பெறமுடியாது நோயாளிகள் அவதி
/
ஏன் இந்த அலட்சியம் : மருத்துவமனைகளில் இல்லை டாக்டர்கள்: சிகிச்சை பெறமுடியாது நோயாளிகள் அவதி
ஏன் இந்த அலட்சியம் : மருத்துவமனைகளில் இல்லை டாக்டர்கள்: சிகிச்சை பெறமுடியாது நோயாளிகள் அவதி
ஏன் இந்த அலட்சியம் : மருத்துவமனைகளில் இல்லை டாக்டர்கள்: சிகிச்சை பெறமுடியாது நோயாளிகள் அவதி
ADDED : பிப் 04, 2025 05:36 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் நோயாளிகள் அவதி அடைகின்றனர்.
மாவட்டத்தை பொறுத்தமட்டில் 12 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. சில மாதங்களாக இங்கு பணியாற்றிய டாக்டர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள சில டாக்டர்கள் இவர்களது பணியிடங்களை கூடுதலாக கவனிக்கின்றனர். மலைப்பகுதிகளான கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு, நத்தம் பகுதியில் உள்ள தொலைதூர கிராமத்தினர் இங்குள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி சிகிச்சை பெறுகின்றனர். மேலும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் நிர்ணயப்பட்ட டாக்டர் பணியிடங்களில் 2முதல் 5 பேர் வரை இடமாற்றம் செய்ய அவ்விடங்கள் காலியாக உள்ளன. இந்நடைமுறை சில மாதங்களாக உள்ள நிலையில் டாக்டர்களை நியமிக்க அவ்வப்போது அரசு தலைமை மருத்துவர்கள் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனருக்கு அறிவுறுத்தல் செய்த போதும் இதுவரை நடவடிக்கை இல்லை.
கொடைக்கானல், தாண்டிக்குடி மருத்துவமனைகளில் 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தரைப்பகுதியில் உள்ள டாக்டர்கள் அவ்வப்போது கூடுதல் பொறுப்பாக வந்து செல்கின்றனர். மேலும் சிறப்பு பிரிவுகளுக்கு டாக்டர்கள் இன்றி வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இந்நிலையை தவிர்க்க டாக்டர்களை நியமிக்க வேண்டும். உயிர் காக்கும் சிகிச்சையில் அரசு மெத்தன நிலையை தவிர்க்க டாக்டர் நியமனம் அவசியமானதாக அமையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
.................
மன அழுத்தத்தில் டாக்டர்கள்
அரசு மருத்துவமனையில் டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும்,செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் பரிதாப நிலையும் தொடர்கிறது. இதில் மலைப்பகுதி மருத்துவமனைகளில் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு டாக்டர்கள் நியமன செய்யப்படுகின்றனர். இவ்வாறான டாக்டர்கள் தங்களது காலக்கெடுவிற்குள் வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர். இவ்வாறான இடத்தை உடனடியாக நிரப்பாமல் டாக்டர்களை கூடுதல் பணி சுமையில் அமர்த்துகின்றனர். இவர்கள் இருவேறு இடங்களை கவனிப்பதால் மன அழுத்தத்தில் உள்ளனர்.உயிர் காக்கும் சேவையில் உள்ள டாக்டர்கள் இடமாற்றம் செய்யும் நிலையில் உடனடியாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாக்கூடாது.
பாலசுப்பிரமணி, இயற்கை ஆர்வலர்,கொடைக்கானல்.