/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கணவரை கொலை செய்து எரித்த மனைவி போலீசில் சரண்
/
கணவரை கொலை செய்து எரித்த மனைவி போலீசில் சரண்
ADDED : செப் 28, 2025 03:16 AM

எரியோடு:திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கணவரை கொலை செய்து எரித்துவிட்டு காணவில்லை என போலீசில் புகார் செய்து நாடகமாடிய மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
எரியோடு குருங்களையன்பட்டயை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுப்பையன் 55. முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமியை 39, இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நல்லமனார்கோட்டை அருகே அருப்பம்பட்டியில் தனலட்சுமியின் தாயார் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் தோட்டத்தில் வசித்தனர். ஆக.24ல் சுப்பையன் மாயமானார். லாரி டிரைவர் என்பதால் வெளியூர் சென்றிருக்கலாம் என உள்ளூர் மக்கள் நினைத்தனர். சில நாட்களுக்குப் பின் கணவரை காணவில்லை என எரியோடு போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். கண்டுபிடித்து தரவில்லை என போலீசாருடன் வாக்குவாதமும் செய்தார்.
போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கிய நிலையில், பல்வேறு வித கொடுமைகளை செய்ததால் கணவரை கொலை செய்து தோட்டத்திலே எரித்துவிட்டு எலும்புகளை அருகே உள்ள குளத்தில் வீசியதாக கூறி தனலட்சுமி எரியோடு போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், தோட்டம், குளத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.