/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியற்ற மின்வேலியால் பலியாகும் வன விலங்குகள் தடுக்கலாமே; வனத்துறை அலட்சியத்தால் விவசாய நிலங்களில் தாராளம்

ADDED : ஜன 12, 2025 05:15 AM

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவை பருவகாலம், சாகுபடி சீசனுக்கு ஏற்ப தங்களின் வழித்தடங்கள் வாழிடங்களை மாற்றி முகாமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
மலைப்பகுதி அடிவார கிராமங்களில் தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது. இதை தொடர்ந்து அடிவார கிராமங்களிலும் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள், காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படும் அவல நிலை தொடர்கிறது. அகழி, சோலார் மின் வேலி போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் பெயரளவில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
யானைகளால் பயிர்கள் , வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாயிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. யானைகளின் நிரந்தர வழித்தட பகுதியை கண்காணித்து அவற்றை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் திட்டமிடலை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. பட்டாசு வெடிப்பது, புகைமூட்டம் எழுப்புதல் போன்ற நடவடிக்கைகள் ஆவணப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. இது யானைகளை கட்டுப்படுத்துவதில் பலனளிப்பதாக இல்லை.
பாதிக்கப்படும் பெரும் பாலான விவசாயிகள் நிலங்களில் அனுமதியற்ற மின்வேலி அமைக்க துவங்கி விட்டனர். இதையடுத்து வன உயிரினங்கள் மட்டுமின்றி மனித உயிர்களும் பலியாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இப்பிரச்னை நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.