/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுப்பன்றிகள் அட்டகாசம் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு
/
காட்டுப்பன்றிகள் அட்டகாசம் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு
காட்டுப்பன்றிகள் அட்டகாசம் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு
காட்டுப்பன்றிகள் அட்டகாசம் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு
ADDED : பிப் 16, 2026 05:36 AM
கன்னிவாடி: திப்பம்பட்டி பகுதியில் காட்டுப்பன்றி தாக்குதலால், மக்காச்சோள சாகுபடி வெகுவாக பாதித்துள்ளது.
ஆடலுார், பன்றிமலை, பெரும்பாறை உள்ளிட்ட மலை கிராமங்களில், யானைகள் மட்டும் இன்றி காட்டுப் பன்றிகளால் விவசாய சாகுபடி பணிகள் பாதிப்படைவது தொடர்கிறது. இச்சூழலில் மலையடிவார கிராமங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் சில மாதங்களாக அதிகரித்துள்ளது. கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் நுாற்றுக்கணக்கான விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் போன்ற மலையடிவார கிராமங்கள் மட்டும் இன்றி, 10 கி.மீ., தொலைவில் உள்ள சாகுபடி நிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளன. கட்டுப்படுத்த வண்ணச் சேலைகளால் வேலி அமைத்த போதும், சாகுபடி பாதிப்பு தொடர்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
திப்பம்பட்டி விவசாயி வேலு கூறியதாவது: சமீபத்திய மழையால் மகசூல், லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். இரவு முழுவதும் ஒலி எழுப்பியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இருப்பிணும், நவாப்பட்டி, போத்திநாயக்கன்பட்டி, கசவனம்பட்டி, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, வட்டப்பாறை வரை, மக்காச்சோள பயிர்கள் காட்டுப்பன்றிகளால் பாதித்துள்ளது., என்றார்.

