/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை: மக்கள் பீதி
/
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை: மக்கள் பீதி
ADDED : ஜூலை 31, 2025 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் பாச்சலுார், பெரியூர், கே.சி. பட்டி, ஆடலுார், பன்றி மலைப் பகுதிகளில் விவசாயத் தோட்டங்களில் தஞ்சம் அடைந்த யானைகளால் பயிர்கள் சேதம் அடைந்தன.
வனத்துறையினர் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் அவை தோட்டங்களிலே முகாமிடுகின்றன.
இதனிடையே பெரியூர் ஊராட்சி பள்ளத்துகால்வாய் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையை கண்ட மக்கள் அலறி யடித்து ஓடினர்.
ரேஞ்சர் குமரேசன் தலைமையில் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.