/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் பொது மக்கள் அச்சம்
/
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் பொது மக்கள் அச்சம்
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் பொது மக்கள் அச்சம்
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் பொது மக்கள் அச்சம்
ADDED : டிச 27, 2024 05:32 AM

கன்னிவாடி: தாண்டிக்குடி,தருமத்துப்பட்டி சுற்றுப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் பொது மக்கள் விவசாயிகள் அச்சமடை ந்துள்ளனர்.
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை,எலுமிச்சை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. தண்ணீர், உணவு தேவைக்காக விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத் துவங்கியுள்ளன.
இதனால் மலை கிராம விவசாயிகள் எந்நேரமும் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது. ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம், தருமத்துப்பட்டி அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்தது.
டி.கோம்பை, தீட்டுப்புலி பகுதியில், 2 குட்டிகளுடன் கூடிய 8 யானைகள் முகாமிட்டது.
தோட்டங்களில் புகுந்த யானைகள் வாழை, தென்னை சாகுபடியை சேதப்படுத்தியது. தோட்டங்களில் தங்கி விவசாயம் செய்த பலர் அங்கிருந்து வெளியேறி கிராமத்திற்குள் வந்தனர். இதேபோல் தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் செல்லும் வாகனங்களை இடைமறிக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் கடுதடி மார்க்கமாக தாண்டிக்குடி பண்ணைக்காடு கொடைக்கானல் ரோட்டில் அடிக்கடி முகாமிடுகின்றன. நேற்று முன்தினம் மதியம் சீதாராம் ஓடை அருகே ஒற்றைக் காட்டு யானை அவ்வழியே சென்ற வாகனங்களை இடைமறித்து பிளிறியது.
தொடர்ந்து வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பெரும்பள்ளம் வனத்துறையினர் யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.