/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்
/
காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்
காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்
காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்
ADDED : ஜன 05, 2026 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கண்ணி வைத்து காட்டு முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு, வனத்துறையினர் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஒட்டன்சத்திரம் வனச்சரகம் ஓடைப்பட்டி பகுதியில் தங்கி கட்டட வேலை பார்த்து வந்த மணிகண்டன் 33, மணிகண்டன் 28, சோலை 27, ஆகிய மூவர் எல்லமேடு பகுதியில் காட்டு முயலை வேட்டையாட கண்ணி வைத்திருந்தனர்.
அப்பகுதியில் ரோந்து சென்ற திண்டுக்கல் வன பாதுகாப்புப் படை, ஒட்டன்சத்திரம் வனப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். மூவர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.