/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் காட்டுத்தீ
/
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் காட்டுத்தீ
ADDED : செப் 08, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வனச்சரகம் காந்திநகர் மலைப்பகுதியில் நேற்று மதியம் 2:15 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. மலைப்பகுதியில் காய்ந்த செடி கொடிகள் சருகுகள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென்று பரவியது.
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர். மலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ளது. பல வகையான மரங்கள், மூலிகை செடிகள் நீரில் கருகின.