ADDED : ஜன 18, 2025 07:22 AM

கொடைக்கானல்,: கொடைக்கானல் நகரில் சுற்றி திரியும் காட்டுமாடுகளால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கொடைக்கானல் வன சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டுமாடுகள் அதிகம் உள்ளன. வனப்பகுதியில் புல், தண்ணீரில்லாத நிலையில் நகரில் இவற்றை தேடி வருகின்றன. அவ்வப்போது காட்டுமாடுகளால் பயணிகள் ,உள்ளூர்வாசிகள் தாக்கப்பட்டு காயம் அடைகின்றனர். காட்டுமாடுகளை கண்காணிக்க வனத்துறை தனி குழு அமைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட், மூஞ்சிக்கல், கோக்கர்ஸ்வாக் , குறிஞ்சியாண்டவர் கோயில், அரசு மருத்துவமனை , செவன் ரோடு, ஏரிச்சாலை, வில்பட்டி பகுதியில் ஏராளமான காட்டு மாடுகள் கன்றுகுட்டியுடன் நடமாடுகின்றன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. புலி, சிறுத்தை, யானை நடமாட்டம் என பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கும் நிலையில் நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகள் ,வனவிலங்குகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.