/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இணைக்கப்படுமா 10 மாணவர்களுக்கு கீழுள்ள துவக்க பள்ளிகள் செலவினங்களை குறைத்தால் அரசுக்கு லாபமே
/
இணைக்கப்படுமா 10 மாணவர்களுக்கு கீழுள்ள துவக்க பள்ளிகள் செலவினங்களை குறைத்தால் அரசுக்கு லாபமே
இணைக்கப்படுமா 10 மாணவர்களுக்கு கீழுள்ள துவக்க பள்ளிகள் செலவினங்களை குறைத்தால் அரசுக்கு லாபமே
இணைக்கப்படுமா 10 மாணவர்களுக்கு கீழுள்ள துவக்க பள்ளிகள் செலவினங்களை குறைத்தால் அரசுக்கு லாபமே
ADDED : நவ 09, 2024 04:37 AM

பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு துவக்க பள்ளிகளை ஒன்றிணைத்து செலவினங்களை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் 103 அரசு துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாக கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. இப்பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் இரு ஆசிரியர்களுக்கு வேலை இருக்காது. அப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
கிராமப்புறங்களில் வருகை குறைவாக இருந்தால் வருகையை அதிகரிப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் மாணவர்கள் குறைந்த பள்ளிகளை இணைப்பது சாத்தியமாகாது. அதே நேரத்தில் பேரூராட்சிகளில் உள்ள சேர்க்கை இல்லாத பள்ளிகளை ஒன்றிணைப்பது அரசுக்கு சாத்தியமாகும். ஆசிரியர்களுக்கும் அலைச்சல் இருக்காது. இதன் மீது நடவடிக்கை எடுத்து செலவினங்களை குறைப்பதற்கு வழி காணலாம்.
...........
தரத்தை உயர்த்தலாமே
செலவினங்களை குறைக்க மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு மாற்ற வேண்டும். இதை கிராமங்களை தவிர்த்து பேரூராட்சிகளில் செயல்படுத்தலாம். உதாரணமாக அய்யம்பாளையத்தில் உள்ள நான்கு துவக்கப் பள்ளிகளில் ஒன்றில் மாணவர்களே இல்லை. ஆனால் ஆசிரியர் வந்து செல்கிறார். மற்ற பள்ளிகளில் 15, 10 மாணவர்களே படிக்கின்றனர். ஆனால் அதில் ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். இது போன்ற இடங்களில் பள்ளிகளை ஒன்றிணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், பா.ஜ.க., அரசு தொடர்பு மாவட்ட செயலாளர், பட்டிவீரன்பட்டி.