/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2019 விட அதிக வித்தியாசத்தில் வெற்றி: திண்டுக்கல் மா. கம்யூ., வேட்பாளர் நம்பிக்கை

ADDED : மார் 16, 2024 07:21 AM

திண்டுக்கல் : ''திண்டுக்கல் தொகுதியில் 2019 தேர்தலை விட இந்த முறை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க.,கூட்டணி வெற்றி பெறும்'' என திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் கூறினார்.
அவர் கூறியதாவது: திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ஒதுக்கியதும் தி.மு.க.,கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியை ஆர்வமாக துவக்கி உள்ளனர்.
2019 தேர்தலை விட இந்த முறை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க.,கூட்டணி வெற்றி பெறும். அதற்கான பணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈடுபடுவோம்.
கூட்டணி கட்சிகள் ஆதரவு நல்ல முறையில் உள்ளது. சபரிமலைக்கு ரயில்வே திட்டம்,பழநி-ஈரோடு ரயில்வே திட்டம்,கொடைக்கானல் டூ மூணாறு இணைப்புசாலை,பழநியிலிருந்து ரோப் கார் மூலம் கொடைக்கானல் பயணிகள் செல் லும் வகையிலான பல்வேறு திட்டங்கள் அரசிடம் உள்ளது. இன்று கூட்டணி கட்சியின் மாநில தலைவர்களை சந்திக்க உள்ளோம்,என்றார்.