ADDED : ஏப் 13, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்சின் ரோப் மாற்றப்படுகிறது.
பழநி முருகன் கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதையை பக்தர்கள் பயன் படுத்துகின்றனர். கோயில் சென்று வர 3 வின்ச் செயல்படுகிறது. மூன்றாவது வின்ச் மேம்படுத்தப்பட்டு 72 பேர் பயணிக்கும் வகையில் செயல்படுகிறது. வின்சை மேலே இழுத்து, கீழே இறக்க ரோப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கயிறு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
தற்போது மூன்றாவது வின்சில் ரூ. 6 லட்சம் மதிப்புடைய 450 மீட்டர் நீளமுடைய ரோப் மாற்றும் பணியில் பொறியாளர்கள், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் ரோப் மாற்றப்பட்டு ஏப்.,15ல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

