/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி லோகோவில் கூல்டிரிங்ஸ் தயாரித்த பெண் கைது
/
போலி லோகோவில் கூல்டிரிங்ஸ் தயாரித்த பெண் கைது
ADDED : ஜூன் 06, 2025 03:05 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போலி லோகோவை கொண்டு கூல்டிரிங்ஸ் தயார் செய்த பெண் கைது செய்யப்பட்டார் .ஈரோட்டை சேர்ந்த டிலோ எனும் நிறுவனம் அதன் லோகோவிற்கு அங்கீகாரம் பெற்று ரூ.10 மதிப்புள்ள கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை தயார் செய்து விற்பனை செய்கிறது
. திண்டுக்கல் மாவட்டத்தில் அதேபோன்ற லோகோவை பயன்படுத்தி சிறிய மாற்றங்களுடன் போலியாக கூல்டிரிங்ஸ் தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர். டிலோ நிறுவன மேலாளர்குமரவேல் புகாரில் அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு ஆய்வாளர் ஜெப்லா உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, அசோக் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கூல்டிரிங்ஸ் நிறுவனத்தை சோதனை செய்தனர். லோகோவை போலியாக பயன்படுத்தி கூல்டிரிங்ஸ் பாட்டில்களை தயாரித்த பொன்னம்மாளை கைது செய்தனர்.அவரிடமிருந்து கூல்டிரிங்ஸ் பாட்டில்கள், லேபிள்களை பறிமுதல் செய்தனர்.