/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு வழிச்சாலையை கடந்த பெண் பலி
/
நான்கு வழிச்சாலையை கடந்த பெண் பலி
ADDED : செப் 12, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை வி.சித்துாரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 56. இவர் தும்மலக்குண்டு ரோடு பிரிவில் திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடந்த போது லாரி மோதி இறந்தார். வடமதுரை தும்மலக்குண்டு வழி திருக்கண் ரோடு நான்கு வழிச்சாலை பணிக்கு பின் மூடப்பட்டுள்ளது. இதனால் நான்கு வழிச்சாலையை அப்பகுதியினர் அதிகளவில் கடக்கின்றனர்.
எதிர் திசையில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை கருதி இப்பகுதியில் 'சப் வே'அமைக்க வேண்டும் என்பதே வடமதுரை சுற்றுப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

