/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'லிப்ட்' கேட்டு சென்ற பெண் விபத்தில் பலி
/
'லிப்ட்' கேட்டு சென்ற பெண் விபத்தில் பலி
ADDED : செப் 21, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை பழையூரை சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரின் மனைவி சாந்தி 49. கடமான்குளத்தில் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். மேய்ச்சலுக்கு சென்ற மாடு வீடு திரும்பாததால் சுற்றுப்பகுதிகளில் தேடினார்.
அப்போது கடமான்குளத்தை சேர்ந்த சிவா 38, ஓட்டி வந்த டூவீலரில் 'லிப்ட்' கேட்டு சென்றார். தாழக்கடை பிரிவு அருகே வந்தபோது டூவீலர் மின் கம்பத்தில் மோதியது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாந்தி இறந்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.