நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி 80.இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வரும் மகள் சந்திரா 58, பேரன் செபாஸ்டியன் 35,ஆகியோருடன் கரூர் மாவட்டம் குளித்தலை உடையபட்டியில் உள்ள ஆரோக்கிய மேரி 2வது மகள் வீட்டிற்கு வேனில் சென்றனர்.
பழநி எரமநாயக்கன்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது வேன் கவிழ்ந்தது. இதில் ஆரோக்கிய மேரி இறந்தார். செபாஸ்டியன், சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

