ADDED : செப் 01, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சிலுவத்தூர், மங்கமனூத்து பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி மரிய பிரிசில்லா 28. இவர் வீட்டின் முன்பாக உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
தீ வேகமாக எரிவதற்காக வீட்டில் வைத்திருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை அடுப்பில் ஊற்றினார். அப்போது, எதிர்பாராத விதமாக மரிய பிரிசில்லா சேலையில் தீ பற்றியது.
இதில் பலத்த காயமடைந்த மரிய பிரிசில்லா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.