/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க : ரோட்டோரங்களில் காய்ந்து, பராமரிப்பின்றி அழியும் மரங்களை பராமரிப்பதில்லை: வெட்டப்பட்டதிற்கு மறுநடவும் இல்லை

ADDED : செப் 01, 2025 02:32 AM

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திண்டுக்கல் - திருச்சி, நத்தம், பழநி ரோடுகள் , ஒட்டன்சத்திரம் - வடமதுரை ரோடுகள், நத்தம் - மதுரை ரோடு என மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர ரோடுகளில், சில ஆண்டுகளுக்கு முன் ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டன. பெரும்பாலான இடங்களில் விரிவாக்க பணிகள் முடிந்தும், முடிவுறும் நிலையிலும் உள்ளன.
ஆனால், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் குறைந்த அளவில் மரக்கன்றுகள் மறுநடவு செய்யப்பட்டது. முன்பு, இம்மரக்கன்றுகளுக்கு டிராக்டர்கள் வாயிலாக தண்ணீர் விட்டு, மரக்கன்றுகளை சுற்றிலும், தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தற்போது மரக்கன்றுகள் பராமரிப்பை, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மரங்களில் ஆணியடித்து விளம்பர பலகைகள் மாட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் மரங்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி கருகி விடுகின்றன.
மேலும் ரோட்டின் இருபுறங்களிலும் குப்பையை குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். வெப்பத்தால் மரங்கள் கருகுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, திண்டுக்கல் - திருச்சி ரோடு, மதுரை, கரூர் உள்பட பல்வேறு பிரதான ரோட்டோரங்களில் குப்பைகளை வைத்து எரிக்கப்படுவதால் மரங்கள் அதிகளவில் காணாமல் போகின்றன.
சில ரோடுகளில் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து வருகிறது.ரோட்டோர மரங்களை பாதுகாக்கவும் புதிதாக மரக்கன்று நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.