/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நின்ற லாரி மீது கார் மோதி பெண் பலி டிரைவர் காயம்
/
நின்ற லாரி மீது கார் மோதி பெண் பலி டிரைவர் காயம்
ADDED : ஜூலை 26, 2025 08:36 PM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் அருகே ரோட்டில் நின்ற லாரி மீது கார் மோதியதில், தஞ்சாவூரை சேர்ந்த பெண் பலியானார்.
தஞ்சாவூரை சேர்ந்த வாடகை கார் டிரைவர் சபரீஸ், 36. இவரது காரில், தஞ்சாவூர் திருமுருகன் மனைவி நித்யா, 45, பழநி சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோவில் பகுதியை கடந்து சென்ற போது, மர பலகை லோடுடன் நின்ற லாரி மீது மோதியது.
இதில், நித்யா சம்பவயிடத்திலேயே இறந்தார். டிரைவர் சபரீஸ் காயமுற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

