/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து பெண் பலி; டிரைவர் காயம்
/
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து பெண் பலி; டிரைவர் காயம்
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து பெண் பலி; டிரைவர் காயம்
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து பெண் பலி; டிரைவர் காயம்
ADDED : ஜூலை 26, 2025 10:59 PM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே ரோட்டில் நின்ற லாரி மீது கார் மோதியதில் தஞ்சாவூரைச் சேர்ந்த நித்யா 45, பலியானார். கார் டிரைவர் சபரீஸ் 36, படுகாயமுற்றார்.
தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் சபரீஸ் 36. இவரது காரில் தஞ்சாவூர் திருமுருகன் மனைவி நித்யா பழநி சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் பகுதியை கடந்து சென்ற போது மர பலகைகள் லோடுடன் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில் நித்யா இறந்தார்.
டிரைவர் சபரீஸ் காயமுற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடரும் விபத்துக்கள் இப்பகுதியை கடந்து செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இங்குள்ள வண்டி கருப்பண சுவாமி கோயில் பகுதியில் ரோட்டிலேயே நின்று வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
இதனால் பின்னால் செல்லம் வாகனங்கள் நிற்கும் வாகனங்கள் பின்புறமாக மோதி விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. விபத்துக்கள் தவிர்க்க ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என போலீசார் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஆணையம் நிறைவேற்றாததால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் பலி ஏற்படுகிறது. இங்கு சர்வீஸ் ரோடு அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.