ADDED : ஜூன் 27, 2025 12:46 AM
நத்தம்:திண்டுக்கல்லில் தீக்குளித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே மங்களப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி 54.இவரது மனைவி பச்சையம்மாள் 48. 2009ல் பி.ஏ.சி.எல்., நிறுவன ஏஜன்டாக பணிபுரிந்தார். இவருக்கு கீழ் 70 -பேர் சப்-ஏஜன்டாக பணிபுரிந்தனர். 2017ல் பொதுமக்களிடம் வசூலித்த பணம் ரூ. 4 கோடியை அந்த நிறுவனத்தில் கட்டி உள்ளார். இதனிடையே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இவரிடம் பணம் கொடுத்த சிலர் பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும்,கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பச்சையம்மாள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை மிரட்டல் விடுத்த மங்களப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி 55, கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ் 63, சிரங்காட்டுபட்டியை சேர்ந்த முத்துச்சாமி 50,உலுப்பகுடியை சேர்ந்த கண்ணன் 46, வீரப்பன் 52, வாடிப்பட்டியை சேர்ந்த தயாளன் 45, ஆகிய ஆறு பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.