/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீக்குளிக்க முயன்ற பெண்: ஊராட்சியை பிரிக்காதீங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
/
தீக்குளிக்க முயன்ற பெண்: ஊராட்சியை பிரிக்காதீங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
தீக்குளிக்க முயன்ற பெண்: ஊராட்சியை பிரிக்காதீங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
தீக்குளிக்க முயன்ற பெண்: ஊராட்சியை பிரிக்காதீங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ADDED : ஜன 14, 2025 05:39 AM
திண்டுக்கல்: தீக்குளிக்க பெண் முயன்றதோடு மாநகராட்சியோடு ஊராட்சியை இணைக்காதீங்க என்பன உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 124 மனுக்கள் பெறப்பட்டதில் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், செல்வம், வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர்கள் ,கங்காதேவி, ராஜேஸ்வரிசுவி கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் அருகே மாலப்பட்டியை சேர்ந்த அழகேசன் மனைவி பாக்கியம் 63. கலெக்டர் அலுவலகத்தில் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தினர். விசாரணையில், இவரது கணவர் அழகேசன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஓய்வூதியப் பணம் வருகிறது. ஆனால், வீட்டிற்கு பணமே கொடுப்பதில்லை. எந்தவித உதவியும் செய்யவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது.
அனுமந்தராயன்கோட்டை ஊர் மக்கள் சார்பில் அளித்த மனுவில், புதிதாக சட்டங்கள் விதித்தபின் 2017 ல் வாய்மொழி உத்தரவின்படி ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின் எங்களால் ஜல்லிகட்டு நடத்த முடியவில்லை. 2019 முதல் 2024 வரை தொடர்ந்து மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.
பொதுமக்கள் கூடி ஜல்லிகட்டு நடத்தலாம் என முடிவெடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தனர்,
திண்டுக்கல் குரும்பட்டி ஊராட்சிக்கு ராமையன்பட்டி ஊர்மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊராட்சியில் 6 உட்கடை கிராமங்கள் உள்ளன. ஊராட்சி முழுவதுமே விவசாயத் தொழிலை ஆதாரமாகவும், தினக்கூலி செய்தும் வாழ்கின்றனர். குறைந்த வருமானத்திற்கேற்ப ஊராட்சி வரியினை கட்ட முடிகிறது.
100 நாள் வேலை திட்டம் கிடைக்கிறது. வீடுகட்டும் திட்டம், விவசாய நிலங்களுக்கு ஊக்கத்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன் கிடைக்கிறது. இதை கருதி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியோடு இணைக்க வேண்டாமென கேட்டுள்ளனர்.
செங்குறிச்சி கிராம மக்கள் அளித்த மனுவில், செங்குறிச்சி ஊராட்சியை 2 ஆக பிரிக்க திட்டம் உள்ளது.
இதை செயல்படுத்தினால் போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம். இதை கருதி இம்முயற்சியை கைவிட வேண்டுமென கேட்டுள்ளனர்.

