/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆத்துார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
/
ஆத்துார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
ADDED : ஜூலை 01, 2025 03:12 AM
செம்பட்டி: வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுப்பிய பெண்கள் ஆத்துார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆத்துார் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை உறுதி திட்டப்பணிக்காக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான வேலை வாய்ப்பு அடையாள அட்டையும் வழங்கப்பட்டு உள்ளது.சில மாதங்களாக தொடர்ந்து ஆயிரம் பேர் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பொது இடங்களில் நீராதார மேம்பாடு சாலை சீரமைப்பு பணிகளை நிறுத்திவிட்டு தனியாருக்கு சொந்தமான தோட்டத்து பணிகளில் ஈடுபடுத்துவதாக புகார் நீடிக்கிறது.இச்சூழலில் நேற்று ஆத்துார் ஊராட்சி உட்பட்ட அக்ரஹாரத் தெரு, புத்துார் கோயில் தெரு, சார்பதிவாளர் அலுவலக தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கோஷங்கள் எழுப்பினர். பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி செயலாளர் மணவாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.