ADDED : பிப் 16, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் விருப்பக் கண்காட்சி திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி ரவுண்டானா அரவிந்த் மெடிக்கல்ஸ் அருகில் பிப் .18 முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், வெளிமாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருளான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளப்பட்டி சேலைகள், சணல் பைகள், மூங்கில் கூடைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வகையில் அரங்குகள் அமைய உள்ளன.