ADDED : மார் 01, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி,டி.என்.கலை கல்லுாரி தமிழ்துறை, பொருளாதார துறை சார்பில் மகளிர் உரிமைகள் ஒருநாள் பயிலரங்கம் கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமையில் நடந்தது . தமிழ் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார்.
தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரைரத்தினம் பேசினர்.
ஜி.டி.என். சட்டகல்லுாரி முதல்வர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். பொருளாதார துறை தலைவர் ரவிச்சந்திரன், காந்திகிராம கிராமியப் பல்கலை பேராசிரியர் நக்கீரன் பேசினர்.
ஜி.டி.என். சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் மெய்கிர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் குளோரி, ஜி.டி.என். மருத்துவ கல்லுாரி முதல்வர் தீபா, பேராசிரியர்கள் கவிதா, மாசிலாதேவி, சவிதா, அருண் பங்கேற்றனர். இணை பேராசிரியர் சாந்தினி நன்றி கூறினார்.

