/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலரை கல்லால் உடைத்த தொழிலாளி ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரம்
/
டூவீலரை கல்லால் உடைத்த தொழிலாளி ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரம்
டூவீலரை கல்லால் உடைத்த தொழிலாளி ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரம்
டூவீலரை கல்லால் உடைத்த தொழிலாளி ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரம்
ADDED : மார் 28, 2025 05:03 AM
வேடசந்தூர் : டூவீலர் ஸ்டார்ட் ஆகாததால் வடமாநில தொழிலாளி டூவீலர் மீது கல்லை போட்டு நொறுக்கினார்.
கல்வார்பட்டி வேடசந்துார் மெயின் ரோட்டில் மினுக்கம்பட்டி பெட்போர்டு தனியார் பள்ளி அருகே வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் டூவீலர் ஆப் ஆனதால் ரோட்டோரம் நிறுத்தி உள்ளார். ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரமடைந்த தொழிலாளி டூவீலரை கீழே சாய்த்தப்படி பெரிய கல்லை எடுத்து பெட்ரோல் டேங்க் மீது போட்டு டூ வீலரை உடைத்து கொண்டிருந்தார்.
அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவரை விசாரித்தபோது மது போதையில் இருப்பது தெரிய வர வேலை பார்க்கும் நுாற்பாலையை தொடர்பு கொண்டு ஆட்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். டூவீலரோ மீண்டும் ஓட்ட முடியாத வகையில் நொறுங்கியதால் அங்கேயே விட்டு சென்றனர்.